ஜெய்ப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தான் செரிஸ். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு கடையில் ரூ.6 கோடி மதிப்பிலான போலியான நகைகளை வாங்கியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் இருக்கும் ஜோரி பஜாரில் கவுரவ் சோனி கடை உள்ளது. செரிஸ், தனது இன்ஸ்டாகிராம் மூலம் கவுரவ் சோனி என்ற நகைக்கடைக்காரரின் தொடர்பு கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்த கடையில் தங்க மூலம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஸ் வாங்கியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த […]
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான எதிர்ப்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது, அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் பிளேஆப் வாய்ப்புக்காக மீதம் இருக்கும் 2 இடத்தில் ஒரு இடத்திற்க்காக கடைசி […]
Naushad Khan : இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம் வீரரான சர்ஃப்ராஸ் கான் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அபார விளையாட்டால் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும், சர்ஃப்ராஸ் கானின் தந்தையான நௌஷாத் கான், சர்ஃப்ராஸ் கானின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததற்காக அவருக்கும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருந்தது. Read More :- Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய […]
நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், […]
அதிக வட்டி தருவதாக கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது என பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன், வேலூர் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் ரூ.4,380 கோடி மோசடி செய்துள்ளது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ரூ.4,380 கோடி மோசடி என்பது தற்போது சுமார் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார். இதுபோன்று […]
லக்னோ: ஊழல் வழக்கை அம்பலப்படுத்தியதால் ஏழு முறை சுடப்பட்ட அதிகாரி ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ ரஹீ.2008ல், முசாபர்நகரில் உதவித்தொகை வழங்குவதில் 83 கோடி ஊழல் நடந்துள்ளது,இதை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்தார்.இவர் மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ளார். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் அவர் தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார்.இந்த தாக்குதலில் அவர் முகத்திலும் சுடப்பட்டது; அவரது முகம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் […]
ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம். ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் அதிகமானோர் ஆன்லைன் பேமண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வது மிகவும் அவசியமான […]
ஈமு கோழி முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தமிழக முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு யுவராஜ்,தமிழ்நேசன்,வாசு ஆகியோர் ஈரோட்டில் ஈமு கோழிவளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி,ரூ.2.7 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதனையடுத்து,121 முதலீட்டார்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று,ஈமு கோழி திட்டத்தில் மோசடி நடந்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,தற்போது விசாரணைக்கு வந்த வழக்கில்,ஈமு கோழி மோசடியில் […]
“அவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து இருக்கும்” என பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோலத்தான் சமூக வலைத்தளமும். எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவந்தாலும், அதனை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து விடுகிறார்கள். அந்தவகையில், கடந்த சில நாட்களாக பேஸ்புக் மெசேன்ஜர் செயலி மூலம் நடக்கும் லிங்க் ஸ்கேம் பற்றி காணலாம். லிங்க் ஸ்கேம்: சைபர் பாதுகாப்பு நிறுவனமான சோபோஸ், புதிய வகையாக பேஸ்புக் மெசேன்ஜர் மூலம் மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் நமது அல்லது நமது […]
வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் ராஜீவ் சக்சேனா_வுக்கு சிறை தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்ஆட்சியில் இத்தாலி நாட்டை சேர்ந்த வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும் , அந்த நிறுவனம் பல்வேறு தரப்பினருக்கு சுமார் ரூபாய் 450 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த துபாயைச் சேர்ந்த […]