ஐபிஎல் போட்டி இன்றைய ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டிற்கு, 212 ரன்கள் அடித்தது.இதனால் 120 பந்துகளில் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி.
unknown nodeபின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பேட்ஸ்மன்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினார்கள்.ஆனால் ராகுல் மட்டும் களத்தில் நின்று போராடினார்.ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டும் அடித்தது.பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 79 ரன்கள் அடித்தார்.ஹைதிராபாத் அணியின் பந்துவீச்சில் ரஷீத்கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதன் மூலம் ஹைதிராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.