நீங்க என் மகனாக பிறக்க வேண்டும் மாமா.. புதுமாப்பிள்ளை புகழ் நெகிழ்ச்சி பதிவு.!

குக் வித் கோமாளி பிரபலம் நடிகர் புகழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலியான பென்ஸியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான

குக் வித் கோமாளி பிரபலம் நடிகர் புகழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலியான பென்ஸியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சில முக்கியமான பிரபலங்கள் மட்டும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

unknown node

புகழ் இப்படி பிரபலமாவதிற்கு  முப்பு தனது சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி தான். இதனால் பல பேட்டிகளில் புகழ் தனது தந்தைக்கு பிறகு தன்னை நன்றாக பார்த்து கொண்டது வடிவேலு பாலாஜி என்று கூறுவது உண்டு.

unknown node

வடிவேலு பாலாஜி கடந்த 2020-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட பலரது மனதில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த நிலையில், இன்று வடிவேல் பாலாஜியின் திருமண நாள் குறித்து பதிவு ஒன்றை புகழ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-பங்கமாய் பழிவாங்கும் சூர்யா.? எதிர்பார்த்து காத்திருக்கும் பாலா… வணங்கான் நிலைமை என்ன.?!

unknown node

அதில் “இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா…உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா…” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் புகழ்.

unknown node