முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா .! பாலாஜியிடம் கொதித்தெழுந்த ஜித்தன் ரமேஷ்.!

When asked to sort out who is the best in the call center task, Jithan Ramesh talks to Balaji and asks him if he is in the top 6.

கால் சென்டர் டாஸ்க்கில் யார் சிறந்தவர் என்று வரிசைப்படுத்த கூறிய போது பாலாஜியிடம் முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா என்று ஜித்தன் ரமேஷ் கேள்வி கேட்கிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் .

நேற்றுடன் முடிவடைந்த இந்த டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் இன்று வெளியான பர்ஸ்ட் புரோமோவில் கேட்ட கேள்விக்கு எல்லாம் 1 மணி நேரம் வரை எதற்கு நான் உட்கார்ந்து பதில் சொல்ல வேண்டும் ,நானும் போன் வைத்து விட்டு போயிருப்பனே.நாமினேஷனில் வர கூடாது என்று விளையாடிவர்கள் யாரும் டாப்-6ல் வரகூடாது என்று பாலாஜி கூறுகிறார்.இதனால் கோபமடைந்த ஜித்தன் ரமேஷ் முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா என்று பல கருத்துக்களை பாலாஜி முன் வைக்கிறார் . ஜித்தன் ரமேஷ் அமைதியாக இருந்தே பல இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார் . தற்போது வாயை திறந்து பேசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .

unknown node