பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு.!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் காலாப்பானி, ரோஜா, தளபதி, ராவணன், துப்பாக்கி, தர்பார், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 12 முறை தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மலையாளத்தில் ஜாக் ஆண்ட் ஜில் என்ற படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சௌபின் சாகிர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தை தமிழிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் சென்டிமீட்டர் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் சௌபின் சாகிர் நடித்த வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு.!