ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் யோகி பாபு..!!

Actor Yogi Babu is said to be playing the lead role in the Tamil remake of The Great Indian Kitchen.

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ராகுல் ரவீந்திரன் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான மற்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.