தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு..!!

Actor Yogi Babu has confirmed that he will be starring in thalapathy 65.

தளபதி 65 படத்தில் நடிப்பதை நடிகர் யோகி பாபு உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்தது.

அதனை தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தளபதி 65 படத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.

ட்விட்டரில் விஜய் ரசிகர் ஒருவர்  யோகிபாபுவிடம் நீங்கள் தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களாக என்று கேட்டதற்கு. பதிலளித்த யோகி பாபு  விஜய் 65 படத்தில் இருக்கிறேன் என்று அவர் பதில் அளித்துள்ளார். ஏற்கனவே மெர்சல், பிகில் போன்ற படங்களில் விஜய்யுடன் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.