தமிழ் சினிமாவில் தற்போது மிக பிசியாக இருக்கும் முன்னணி ஹீரோ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். தமிழில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர், என பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு முன்ணனி ஹீரோ படங்களில் வில்லனாக நடிக்கிறார்.
unknown nodeஇதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தை வெங்கட கிருஷ்ண ரகுநாத் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார்இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இசை கலைஞனை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள திரைப்படம்.