முதல் முதலாக தமிழ்நாட்டுல வந்து தமிழில கதச்சேன், பிடிச்சு உள்ள போட்டானுங்க.!மிரட்டலாக வெளியான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீசர்.!

The teaser of Vijay Sethupathi's 'Yaadhum Oore Yaavarum Kelir' has gone viral.

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று யாதும் ஊரே யாவரும் கேளிர்.எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தற்போது அந்த வீடியோவை விஜய் சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

unknown node