பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா ...!

With just 2 days to go before the final, Priyanka has been evicted from the Bigg Boss house again due to ill health.

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். பைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று பிரியங்காவிற்கு உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.

இந்நிலையில், இன்றும் பிரியங்காவிற்கு உடல்நிலை மேலும் மோசமாக இருப்பதால் பிரியங்கா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், அவர் நாளை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனக்கு மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மாத்திரையை சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே இருப்பதாக பிரியங்கா கூறியதாகவும், அவர் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், அவரது நலன் கருதி பிக் பாஸ் கட்டாயமாக அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.