Tag: மருத்துவமனை

அதிர்ச்சி..! குப்பை தொட்டியில் கிடந்த 5 மாத சிசு..! மருத்துவமனைக்கு சீல்..!

மாண்டியா-மைசூரு-பெங்களூரு ஆகிய பகுதிகளில் பெண் சிசுக்கொலை மோசடி கும்பலை போலீசார் கண்டுபிடித்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஹோஸ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் குப்பை தொட்டியில் ஐந்து மாத சிசு கண்டறியப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மூன்று செவிலியர்கள் உட்பட சில ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மருத்துவர் தலைமறைவாக […]

#Arrest 4 Min Read
Baby

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்  அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.  விழுந்ததில் அவருக்கு இடுப்பு எழுப்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி வெற்றியை எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் வெற்றி கனியை பறித்தது. தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!  119 உறுப்பினர்களை […]

#Congress 3 Min Read
Chandrasekara rao

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் 5-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கை […]

Captain Vijayakanth 3 Min Read

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர்…! பசும்பொன் பயணம் ரத்து…!

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வரின் பசும்பொன் பயணம் ரத்து.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுகுவலி காரணமாக நேற்று இரவு, போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். சுமார் இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின்பு முதல்வர் தனது காரில் வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து, மருத்துவர்கள் நீண்ட தூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், இன்று மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சார்பில் அமைச்சர்கள் நாளை குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.  

#MKStalin 2 Min Read
Default Image

அமைச்சர் மெய்யநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிஸ்சார்ஜ்..!

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடலநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரயிலில் சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

hospital 2 Min Read
Default Image

ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – டாக்.ராமதாஸ்

புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும் என டாக்.ராமதாஸ் ட்வீட்.  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக டாக்.ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் […]

- 6 Min Read
Default Image

டிடிவி தினகரன் தற்போது நலம்பெற்று வருகிறார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

டிடிவி தினகரன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.  அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் […]

ttv 2 Min Read
Default Image

திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.  திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை லயித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

- 2 Min Read
Default Image

ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி…!

ஓபிஎஸ் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி. அதிமுகவில் தொடர்ந்து வரும், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் புதிய அறிவிப்புகள் தொடர்ந்து  வெளியாகி வருகிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#OPS 1 Min Read
Default Image

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வெட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

#Corona 2 Min Read
Default Image

#Breaking:ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்: “நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை […]

MinisterMa.Subramanian 4 Min Read
Default Image

ஒடிசா : விழாவில் விருந்து சாப்பிட்ட 40 பேர் உணவு விஷமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி …!

ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து போடப்பட்டுள்ளது. இந்த விருந்தில் போடப்பட்ட உணவை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களது உணவு விஷமாகியதன் காரணமாக தான் இவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Odisha 2 Min Read
Default Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை குஷ்பு தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்; இந்நிலையில் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா எனும் தொடரிலும் நடித்து வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது குஷ்பூ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

#BJP 3 Min Read
Default Image

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா …!

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். பைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று பிரியங்காவிற்கு உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் […]

bigg boss 3 Min Read
Default Image

விஷமான உணவு..! 8 பேரின் நிலை என்ன..? விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்..!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார் சத்திரத்தில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்போன் உதிரிபாகம் தயாரிக்கக்கூடிய தனியார் தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பூந்தமல்லியில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு விஷத்தன்மை கொண்டதாக மாறியதால், பல பெண்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற […]

#Strike 4 Min Read
Default Image

சத்துணவில் பல்லி; மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

கருங்காலிகுப்பம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை போளூர் அருகே கருங்காலிகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இருந்தது தெரிய வந்ததை அடுத்து உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Dshorts 1 Min Read
Default Image

டெல்லி: நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த உலகின் முதல் நபர்..!

டெல்லி மருத்துவமனையில் நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 34 வயதுடைய நபருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் முக்கோர்மிகோசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று அவரது நாசி குழிக்குள் பரவியது மட்டுமல்லாமல், அவரது இடது நுரையீரல் மற்றும் வலது சிறுநீரகத்திற்கும் பரவியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நுரையீரல், சிறுநீரகத்தில் […]

- 4 Min Read
Default Image

வடக்கு மாசிடோனியா: கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து..!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  டெட்டோவோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அந்த மருத்துவமனை முழுவதும் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் தப்பிக்க வழியின்றி அலற தொடங்கியுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து […]

- 3 Min Read
Default Image

Breaking:அதே வார்டில் அடுத்தபலி..கன்னியாகுமரி மருத்துவமனையில் பலி எண்ணிக்கை உயர்வு

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று காலை உதயகுமார் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டு அவ்ர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வார்டில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த, எஸ்தர் ராணி 59, ஜான் 49 மற்றும் ஜெகன் […]

coronavirus 4 Min Read
Default Image

கொரோனாவிற்கு இந்தியாவிலே மிகப்பெரிய மருத்துவமனையை அமைத்தது-ஒடிசா அரசு

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையை அரசு மருத்துவமனையில் அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்க 1000 […]

coronavirus 3 Min Read
Default Image