இதயம் நொறுங்கி சொல்றேன் – கண்ணீர் ததும்ப நடிகர் வடிவேலு இரங்கல்!

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஆடியோவில், “மாரிசன் திரைப்படத்தின் இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே, இசைஞானியின் தங்க மகள் பவதாரிணி மறைந்த செய்தியை கேட்டு, எங்கள் நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது.
அருமை அண்னன் தங்க மகள், செல்ல புள்ள, கள்ளம் கபடம் இல்லாத தெய்வ குழந்தை. 47 வயது அந்த பொண்ணு, எங்க குடும்பத்தில் என்ன செய்தன்று தெரியவில்லை. சாதராண குழந்தை இல்லங்க அது. தன்னுடைய குயில் குரலில் எத்தனையோ வெற்றிப் பாடல்களை பாடியிருக்கிறாள். அவரது மறைவுக்கு உலக தமிழர்கள் அனைவரும் நொறுங்கி இருப்பார்கள்” என கண்ணீர் ததும்ப தெரிவித்துள்ளார்.
மறைந்த பாடகி பவதாரிணி கடைசியாக பாடிய பாடல்! உருக்கமாக இரங்கல் தெரிவித்த சிம்பு!
கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025