இயக்குநர் செல்வராகவனின் முதல் மனைவிக்கு திருமணமா.?

நடிகை சோனியா அகர்வால் இரண்டாவதாக திருமணம் செய்ய போவதாக வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் இரண்டாவதாக திருமணம் செய்ய போவதாக வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

கடந்த 2002ல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் 2006ல் இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது சோனியா அகர்வால் தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மூன்று நாட்களின் தனது திருமணம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு காத்திருங்கள் என்று குறிப்பிட்டு தாலி கட்டும் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது ரசிகர்கள் அதை நம்ப இயலாமல் உண்மையா என்ற கேள்வியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த வீடியோ தனது அடுத்த படத்தினை குறித்த தகவலாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் உண்மை என்பதை அறிய 3நாட்கள் காத்திருக்க தான் செய்ய வேண்டும்.

unknown nodeunknown node