விக்கி-நயனின் அடுத்த தயாரிப்பு.! டைட்டில் அறிவிப்பு.!

The title of the next film to be produced by Vignesh Sivan and Nayantara's Rowdy Pictures has been announced.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் பல படங்களை நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் .இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகி வருகிறது.அதனை தொடர்ந்து ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளார் .அது மட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .’வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்று டைட்டில் வைத்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான வி.விநாயக் இயக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது.விரைவில் அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node