சிம்புவுக்கு திருமணம் எப்போ.? மனம் திறந்து பேசிய டி.ராஜேந்தர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு 39 வயதாகியும்,  இன்னும் திருமணம் செய்யவில்லை. எப்போது தான் சிம்பு திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு 39 வயதாகியும்,  இன்னும் திருமணம் செய்யவில்லை. எப்போது தான் சிம்பு திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அவருக்கும், தங்களது குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர்.

unknown node

இந்த நிலையில், சிலம்பரசன் திருமணம் குறித்து டி.ராஜேந்தர் மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இன்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

unknown node

அப்போது அவரிடம் சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது. கடவுள் எழுதினால் தான் இந்த உலகத்தில் திருமணம் நடக்கும். நிச்சயமாக என் மகன் சிம்புவின் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மணப்பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும்.

unknown node

இதை தான் நான் கடவுளிடம் வேண்டுகிறேன். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுள்களிடம் இதுகுறித்து பிரார்த்தனை செய்கிறேன்” என்று பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் சிம்புவிற்கு நல்ல பெண் மனைவியாக அமைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகிறார்கள்.