சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணிபோஜன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான “மிரள்” ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஓரளவு வசூல் செய்தது.
unknown nodeஇந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பரத்திற்கு ஜோடியாக “லவ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான டீசரும் நேற்று வெளியானது. டீசரை பார்க்கையில் வித்தியாசமான கதைக்களத்தை உணர்த்துவது போல இருந்தது. டீசரை வெளியிட சென்னையில் ஒரு விழாவும் நடந்தது.
இதையும் படியுங்களேன்-பெரிய தொகைகொடுத்து “மாவீரன்” படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.!
unknown nodeloveteaserlaunch [Image Source: Twitter ]
இந்த விழாவில் பேசிய நடிகை வாணிபோஜன் ” நான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தினமும் வீட்டுக்கு போகையில் காயங்களுடன் தான் செல்வேன். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. படத்தில் பல ஆக்சன் காட்சிகள் வரும்.
unknown nodeVani Bhojan [Image Source: Twitter ]
படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளின் போது நானும் பரத்தும் உண்மையாகவே தாக்கிக்கொள்வோம். நிறையவே அடிவாங்கினேன். அவரும் அடிவாங்கினார். அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் பரத்” என்றும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். ஆனாலும், காயங்களுடன் தான் வீட்டுக்கு செல்வேன் என்று வாணிபோஜன் கூறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.