கீர்த்தி சுரேஷ்க்கு கால் செய்த தனுஷ்.! காரணம் என்ன..?

தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்கார்

தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது வென்றுள்ளார்.

unknown node

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தாக சாணிக் காயிதம், படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

unknown node

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர் என்றே கூற வேண்டும். ஏனெனில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆக்ரோசமாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்தை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

unknown node

இந்நிலையில், இந்த படத்தின் கதையை முதலில் கேட்டவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க தயங்கினாராம். அதன் பின், நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேஷிற்கு போன் செய்து “இந்த படத்தின் கதை மிகவும் அருமையான கதை. முழு மனதுடன் நம்பிக்கை வைத்து படத்தில் நடிங்கள்.. ராக்கி இயக்குனர் அருண் மாதேஷ்வரன் எனக்கு தெரிந்த இயக்குனர்.. படத்தின் கதை எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு கண்டிப்பாக செட் ஆகும்” என தனுஷ் கூறினாராம்.

unknown node

இதனை நடிகை கீர்த்தி சுரேஷே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு தனுஷும் கீர்த்திசுரேஷும் தொடரி படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து படம் நடிக்கவில்லை. இதனால் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் காத்துள்ளனர்.