நடிகை பூர்ணா தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
unknown nodeActress Poorna Marriage [Image Source: Twitter/Cinebloopers]
தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கிய பூர்ணா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் நிச்சியதார்த்தம் செய்து கொண்டார்கள். பிறகு திருமணம் தொடர்பான அறிவிப்பையும் நடிகை பூர்ணா வெளியிட்டிருந்தார்.
unknown nodeActress Poorna Marriage [Image Source: Twitter/Cinebloopers]
இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நேற்று கேரள மாநிலம் கொச்சியில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணமதில் இருவர் வீட்டின் உறவினர்கள் மற்றும் சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
unknown nodeActress Poorna Marriage [Image Source: Twitter/Cinebloopers]
இவர்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட, புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலனங்கள் புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
unknown node