என்ன நண்பா ரெடியா..? 'வாரிசு' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று வெளியீடு.!

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

unknown node

VarisuAudioRights T-Series [Image Source: Twitter ]

இந்த படத்திற்கான முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், சில காரணங்களால் பாடல் வெளியாகவில்லை. இதனால் படத்தின் முதல் பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதையும் படியுங்களேன்-தளபதி 67 படத்தில் நடிக்க விஷால் கேட்ட சம்பளம்…எத்தனை கோடிகள் தெரியுமா..?

unknown node

Varisu First Single [Image Source: Twitter]

இந்த நிலையில், தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகும் அப்டேட்டை  வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

unknown node

குடும்ப சென்டிமென்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.