மீண்டும் உருவாக உள்ள அக்னி நட்சத்திரம்! விதார்த் நாயகனாக நடிக்கிறார்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, விஜயகுமார் என பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அக்னி நட்சத்திரம். தற்போது இந்த பட

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, விஜயகுமார் என பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அக்னி நட்சத்திரம். தற்போது இந்த பட தலைப்பை வைத்து தமிழில் ஒரு புதிய படம் தயாராகிறது.

unknown node

இந்த படத்தில் நடிகர் வித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உத்தரவு மகாராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்த உதய் நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது. இப்படத்தினை சரண் என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படத்துக்கான சூட்டிங் சென்னை, ஏலகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் உருவாக உள்ள அக்னி நட்சத்திரம்! விதார்த் நாயகனாக நடிக்கிறார்!