ஜனவரி 10ஆம்.தேதியன்று சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும், தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி இருந்தது. இத்த இரு படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் விஸ்வாசம் திரைப்படம் முதல் பாதியில் அஜித்தின் அலப்பறையான நடிப்பில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி அப்பா மகள் சென்டிமென்ட் ஆகவும் படம் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ஒன் மேன் ஷோவாக கலக்கியுள்ளார். இதில் பழைய ஸ்டைலான ரஜினியை காரத்திக் சுப்புராஜ் தனது சூப்பரான கதை திரைக்கதை மூலம் திரையில் ரசிகர்கள் ரசிக்க கொடுத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என நடிகர்கள் பலர் இருப்பதால் படத்தின் நீளம் அதிகமாக இருப்பது படத்திற்கு கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த இரு படங்களின் இரண்டு நாள் வசூல் பேட்ட படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சேர்த்து 35.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் திரைப்படம் தமிழில் மட்டுமே வெளியாகி 33.5 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
DINASUVADU