நடிகர்விஷ்ணு விஷால்தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில்ஜெகஜால கில்லாடி, FIRஎன பல படங்கள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஜீவா படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்ஜெர்ஸிஇப்படத்தை தமிழில் நடிகர் ராணா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாகவிஷ்ணு விஷால்நடிக்க உள்ளார். ஹீரோயினாகஅமலாபால்நடிக்க உள்ளாராம். முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பாலிவுட்டில் ஜெர்ஸி பட இந்தி ரீமேக்கில்ஷாகித் கபூர்நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கு ஹிட் படமானஅர்ஜுன் ரெட்டிஹிந்தி ரீமேக்கில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.