இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் விஷால்-ஆர்யா.! படத்தின் டைட்டில் குறித்து வெளியான தகவல் .!

The film crew is said to be planning to release the title of the film starring Vishal and Arya on the 25th at 5 pm.

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடிப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் விஷால்-ஆர்யா.! படத்தின் டைட்டில் குறித்து வெளியான தகவல் .!