இந்தியில் ரீமேக்காகும்‌ 'இரும்புத்திரை'.!வில்லனாக விஷால்?அப்போ ஹீரோ.?

It has been reported that Salman Khan will play the role played by Vishal in the Hindi remake of 'Iron Curtain'.

இந்தியில் ரீமேக்காகும்‌’இரும்புத்திரை’படத்தில் விஷால் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரும்புத்திரை.இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும் ,வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூனும் சிறப்பாக நடித்து ரசிகர்களை பாராட்டை பெற்றனர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது .அதில் விஷால் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடிக்கவுள்ளதாகவும் , அர்ஜூன் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது .இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.