இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown node2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
unknown nodeபடம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த கார்த்தி ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், தற்போது படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
unknown nodeஅதன்படி விருமன் படத்தின் இசை வெளியீட்டு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றதில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
unknown nodeபடத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார் என்பதால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை கலந்த பாடல்கள் வெளியாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
unknown node