விக்ரம் படத்தின் அப்டேட் விரைவில் ... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!

Production company Raj Kamal has announced that an update of Vikram will be released soon

விக்ரம் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. வெளியாகி தற்போது யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த படத்திற்காண படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ”  விக்ரம் டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது புதிய அப்டேட் விரைவில் வருகிறது ” என்று தெரிவித்துள்ளனர்.

unknown node