இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
unknown nodeராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 150 கோடியும், உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
unknown nodeஇதையும் படியுங்களேன்-கமல் சொன்ன சீக்ரெட் அட்வைஸ்… லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்.!
இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.
unknown nodeஇந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
unknown nodeஇந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ், உதயநிதிஸ்டாலின் , விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோருக்கு அன்பாக முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது .
unknown node