நடிகர் விஜய்யா இது? லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!

ThalapathyVijay

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ThalapathyVijay திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா, மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

பிரசாந்த், பிரசன்னா, யோகி பாபு, ஜெய்ராம், மோகன், வத்வா கணேஷ், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியீடு?

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டாவது லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன்பிறகு சமீபத்தில் விஜய் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவில் விஜய்யை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் தி கோட் படப்பிடிப்புக்கு சென்றார்கள்.

அதனை தொடர்ந்து நேற்றும் விஜய்யை பார்க்க ரசிகர்கள் பலரும் கூட்டமாக சென்று ஷூட்டிங் ஸ்பார்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களை பார்க்க சென்ற விஜய் ஒரு  வேன் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தார். அப்போது விஜய் தி கோட் படத்திற்காக மீசை மற்றும் தாடியை எடுத்துக்கொண்டு இளமையான தோற்றத்தில் இருந்தார்.

இதனை பார்த்த பலரும் இது நடிகர் விஜய்யா? என கேள்விகளை எழுப்பினார்கள்.  அந்த அளவிற்கு விஜய் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். மேலும் நெட்டிசன்கள் அவருடைய லுக் பற்றி ட்ரோல் செய்தும் வருகிறார்கள். இந்த கெட்டப் தி கோட் படத்தில் இளம் வயது விஜயாக நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தான் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்