நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படத்தில் பூஜாஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
unknown nodeஇயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், சாம்டைம் சாக்கோ போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர்.
unknown nodeஇந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அடுத்த வாரம் புதன் கிழமை படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
unknown nodeஅந்த வகையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பீஸ்ட் தெலுங்கு ப்ரோமோஷன் விழாவில், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை பூஜாஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அனிருத் மற்றும் பூஜா அரபிகுத்து பாடலுக்கு நடனமாடினார்கள்.
unknown nodeநிகழ்ச்சியில் பேசிய பூஜா ஹெக்டே ” பீஸ்ட் படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி..என்னுடைய ஹீரோ விஜய் சார் விழாவிற்கு வரவில்லை நான் உங்களை மிஸ் பண்றேன் சார்..நான் மட்டுமில்லை இங்கே இருக்கும் அனைவரும் மிஸ் பண்றோம் சார்” என எமோஷனலாக பேசியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.