பிக்பாஸ் ரியோ வீட்டில் ஒன்றிணைந்த விஜய் டிவி பிரபலங்கள்.!என்ன விசேஷம் தெரியுமா.?

As Bigg Boss celebrity Rio celebrates his daughter's first birthday, Vijay TV celebrities and Big Boss celebrities are in attendance.

பிக்பாஸ் பிரபலமான ரியோ தனது மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில் அதற்காக விஜய் டிவி பிரபலங்களும் பிக்பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .

இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரும் ஒருவருக்கொருவர் சந்தித்து நட்பை பாராட்டி வருகின்றனர்.இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் அனைவரும் இதுபோன்று ஒன்றாக இணைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.ஆம் பிக்பாஸ் பிரபலமும் ,நடிகருமான ரியோ தனது அன்பு மகளான ரிதியின்  முதலாவது பிறந்தநாளாம் நேற்று .அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் .

அதற்காக விஜய் டிவி பிரபலங்களும், பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் . அஸ்வின்,,ஆரி, அர்ச்சனா,கேபி ,சோம், சம்யுக்தா, தொகுப்பாளினி பாவானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node