ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'உப்பெனா'.!

Uppena, starring Vijay Sethupathi as the villain, has grossed Rs 100 crore.

விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்த உப்பெனா திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளியான திரைப்படம் உப்பெனா.இந்த படத்தின் மூலம் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உப்பெனா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபலங்கள் உட்பட பலர் பாராட்டி வரும் உப்பெனா திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை படக்குழுவினர் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.அறிமுகமான முதல் படமே இந்தளவிற்கு வசூலில் சாதனை படைத்து வருவது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'உப்பெனா'.!