பல வருட கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம்.! இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா.?

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் "இடம் பொருள் ஏவல்". இந்த திரைப்படத்தில்

விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம்“இடம் பொருள் ஏவல்”. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

unknown node

Idam Porul Yaeval Moive Poster [Image Source: Google]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படத்தை  வெளி­யிட படக்குழு திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால்,  அந்த ­ச­ம­யம் இப்­ப­டத்­தைத் தயா­ரித்த திருப்­பதி பிர­தர்ஸ் நிறு­வ­னம் சில நிதிப் பிரச்சினையால் முடங்கியது. அத­னால் இப்­ப­டத்­தின் வெளியீட்டை தள்­ளிப்­போட்­ட­னர்.

unknown node

Idam Porul Yaeval Moive Poster [Image Source: Google]

அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் மூடப்பட்டிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக படத்தை வெளியிடமுடிய வில்லை. எனவே படம் ஓடிடியில் வெளியாகப்போவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதையும் படியுங்களேன்-இதுதான் பிரேக்கிங் நியூஸ்… “சிம்பு- தனுஷ்” கூட்டனில் பிரமாண்ட திரைப்படம்.! விரைவில் தெறிக்கும் அப்டேட்.!

unknown node

Idam Porul Yaeval [Image Source: Google]

இந்த நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு சீனு ராமசாமி + விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகும் படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.