நான் கற்பனையில் கூட நினைக்காததை கமல் கொடுத்து விட்டார் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி.!

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் இது தான் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

unknown node

இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன்  ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படியுங்களேன்-ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான “தலைவர் 169” டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

unknown node

படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சந்தனம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் இவரது நடிப்பில் மற்றும் அறிமுக காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறவேண்டும். இதனையடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார்.

unknown node

அப்போது அவரிடம் செய்யதியாளர் ஒருவர் ” விக்ரம் படத்தின் இயக்குனருக்கு கார்,உதவி இயக்குனர்களுக்கு பைக், சூர்யாவிற்கு வாட்ச் என தயாரிப்பாளர் கமல்ஹாசன் கொடுத்துள்ளார். உங்களுக்கு பரிசாக என்ன கொடுத்தார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.

unknown node

அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி ” கமல் சார் கூட நடிக்கிற வாய்ப்பை கொடுத்தார். அது நான் கற்பனையில் கூட நினைத்திடாத ஒன்று. இது எவ்வளவு பெரிய விஷயம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.