"நான் தான் வில்லன்" உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

unknown node

இந்நிலையில், இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” விக்ரம் படத்தில், நான் தான் வில்லன் படப்பிடிப்பில் கமல் சாருடன் நடிக்கும்போது எனக்கு 10 தல இருக்கும் அவரோட ஒரு ஒரு அசைவையும் ஒரு சேதுபதி ரசிப்பான், ஒரு சேதுபதி அவரிடம் நிறைய கத்துப்பான் ,ஒரு சேதுபதி நோட்ஸ் எடுப்பான் அதுவே யாருக்கும் கிடைக்காத பெரியப் பாக்கியம்” என தெரிவித்துள்ளார்.