நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக அங்கு விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 14-ஆண்டுகளுக்கு பின்பு அவர் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளதால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் ஏரளமாக செல்வதும் அது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இணையத்தை கலக்கி வருகிறது.
அந்த வகையில் ஒரு வீடியோவில், உங்கள் அன்பை பார்க்கும் போது, எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது என நடிகர் விஜய் எமோஷனலாக பேசியுள்ளார். கேரளாவில் ரசிகர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு 2 கண்கள் மாதிரி.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, இந்த 32 வருடங்களில் என்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல், உங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்ததற்கு நன்றி. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்கள் விஜய் தான்” எனக் கூறியுள்ளார்.
unknown nodeஇத்தனிடயே, ரசிகர்களுடன் வீடியோ எடுத்துள்ள விஜய் அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டு, “எண்டே அணியத்திமார், அணியன்மார், சேட்டன்மார், சேச்சிமார் அம்மாமார் எல்லா மலையாளிகளுக்கும் எண்டே ஹ்ருதயம் நிறைஞ்ச நண்ணி’ என மலையாளத்தில் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
unknown node