கமலுக்கு சொன்ன கதையில் விஜய்? தளபதி 69 படத்தின் சீக்ரெட் தகவல்!

கமல்ஹாசனுக்கு சொன்ன கதையை வைத்து தான் எச்.வினோத் தளபதி 69 படத்தினை இயக்கவுள்ளார் என தகவல்கள் பரவி வருகிறது.

thalapathy 69 kamal

சென்னை : விஜய் நடிக்கவுள்ள கடைசி படமான தளபதி 69 படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தினை KVN Productions நிறுவனம் தயாரிக்க இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். எனவே, இது கடைசி படம் என்பதால் படம் எந்த மாதிரி கதையம்சத்தை கொண்ட படம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கண்டிப்பாக படம் அரசியல் கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டரில் “ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவன்” என வாசகம் அச்சிடப்பட்டு விஜய் கையில் தீ பந்தம் ஒன்றை ஏற்றிக்கொண்டு இருப்பது போல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதனை வைத்து பார்க்கையில் படம் அரசியல் சார்ந்த படம் என்பது உறுதியும் ஆனது.

இந்த நிலையில், இந்த படத்தின் கதை முதலில் கமல்ஹாசனிடம் எச்.வினோத் கூறிய கதை என்று தகவல் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே, எச்.வினோத் கமல்ஹாசனிடம் சொன்ன படத்தின் அறிவிப்பு வெளியாகும்போதும் கையில் தீ பந்தத்தை வைத்து இருந்தார். அதுவும் அரசியல் படம் தான் எனவும் முன்னதாக கூறப்பட்டது.

அந்த படம் சில காரணங்களால் அப்படியே ட்ராப் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, அந்த கதையை கூறி அதனை வைத்து தான் எச்,வினோத் தளபதி 69 படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்