தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனரும் நடிகருமாகிய விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், திருமணம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
எங்கு சென்றாலும் ஒன்றாகவே ஜோடிகளாக செல்லும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இன்று நயன்தாராவின் தந்தைக்கு பிறந்தநாள். எனவே, விக்னேஷ் சிவன் நயன்தாராவின் தந்தை மற்றும் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,
unknown node