சீரடி சாய்பாபா கோவிலுக்கு விசிட் அடித்த விக்கி-நயன்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

unknown node

நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

unknown node

இதற்கிடையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

இந்த வெற்றியை தொடர்ந்து இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் “சீரடியில் இருந்து என் கண்மணியுடன் சாய்பாபாவை சந்திக்கும் நன்றியுணர்வு பயணம்” என பதிவிட்டுள்ளார்.

unknown node