கொரோனா தடுப்பு பணிகளுக்காக வெற்றிமாறன் ரூ.10 லட்சம் நிதியுதவி..!!

Director Vetrimaran has donated Rs 10 lakh to the Chief Minister's Relief Fund for corona prevention work.

இயக்குநர் வெற்றிமாறன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் வெற்றி மாறன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து,ரூ.10  லட்சத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.