சென்னையில் 15 நாட்கள் ஷூட்டிங்கும், மும்பையில் 5 நாட்கள் ஷூட்டிங்கும் மீதம் உள்ளதாம். அதன் பிறகு வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங் மொத்தமும் முடிந்துவிடுமாம்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.
unknown nodeஇப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று முடிந்து தற்போது படக்குழு சென்னை வந்துள்ளது. தற்போது சென்னையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். அதன் பின்பு மீண்டும் படக்குழு மும்பை சென்று 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் முடித்துவிடுமாம்.
படத்தின் கதைக்களம், ஓர் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம். தென் தமிழ்நாட்டில் இருந்து மும்பை செல்லும் ஓர் இளைஞனின் கதை என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.