மாநாடு திரைப்படத்தின் அப்டேட் வெங்கட் பிரபு ட்வீட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

Director Venkat Prabhu has announced the latest update of the conference film on his Twitter page

மாநாடு திரைப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகாண படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்திற்கான பெயரை வெளியிட்டுள்ளார். ஆம் இந்த மாநாடு படத்தில் அவருக்கு சீதா லட்சுமிஎன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

unknown node