வெங்கட் பிரபுவின் " லைவ் டெலிகாஸ்ட்" வெப் தொடர் டிரைலர்..!

It has been announced that the trailer of the live telecast web series starring Kajal Peya directed by Venkat Prabhu will be released today.

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் பேயாக நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலர் இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு .இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார்.இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் .

காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கயல் ஆனந்தி,வைபவ் , டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தினை வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் வெளியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலரை இன்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார்.