மாநாடு என ஹிட்.?! VTK அதற்கும் மேலே.!! நெருப்பு மாதிரி இருக்கிறார் சிம்பு.! மாஸ் காட்டும் கெளதம் மேனன்.!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெறித்தனமாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் உண்மையில் கெளதம் மேனன் படம்தானா என்பது போல படத்தின் போஸ்டர்களும், ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இருந்து முத்து பயணங்கள் (சிம்புவின் கதாபாத்திரம் பெயர்) என சிறிய கிளிசம்பஸ் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. சரியாக மதியம் 1.26-க்கு வெளியாகியுள்ளது.

அந்த விடீயோவில் சிம்பு, அவரது அம்மாவாக ராதிகா, தங்கை என மூன்று பேரும் மும்பையில் எப்படி இருக்கிறார்கள், என காட்டப்பட்டுள்ளது. காட்சிகள் இது, உண்மையில் கெளதம் மேனன் படம்தானா, இல்லை வெற்றிமாறன் படமா என்பது போல படத்தின் காட்சிகள் ஆக்ரோஷமாக இருக்கிறது.

மாநாடு என்ன பெரிய ஹிட் அதற்கும் மேலே ஹிட் கொடுக்கிறேன் என சிம்பு கங்கணம் கட்டிக்கொண்டு காட்சிக்கு காட்சி தீயாய் இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

unknown node