வாரிசு படம் இப்படி தான் இருக்கும்.. பிரபல நடிகை கூறிய சூப்பர் தகவல்.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "வாரிசு". இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

unknown node

Ranjithame [Image Source: Twitter ]

குடும்ப சென்டிமென்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து நேற்று முன்தினம் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல சாதனைகளையும் படைத்தது வருகிறது.

unknown node

Varisu Moive [Image Source: Twitter]

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வாரிசு படம் எப்படி பட்ட படமாக இருக்கும் என்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சங்கீதா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-கோமாளி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.? வெளியான சீக்ரெட் தகவல்..!

unknown node

Sangeetha About Varisu Movie [Image Source: Twitter]

இதுகுறித்து பேசிய அவர் ” தளபதி விஜய் பல வருடங்கள் களித்து இப்படியொரு படத்தில் நடிக்கிறார். வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதுமட்டுமின்றி நல்ல கருத்து ஒன்றும் படத்தில் இருக்கிறது. குடும்பமாக வந்த இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.