சியான் 60 அப்டேட்: தந்தைக்கு ஜோடியாக சிம்ரன்... மகனிற்கு ஜோடியாக வாணி போஜன்..!

Actress Simran has been paired with Vikram in 'Sian 60' and actress Vani Bojan has been paired with Dhruv Vikram.

சியான் 60 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை சிம்ரனும், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கவுள்ளதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த சியான் 60 படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை சிம்ரனும், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.