#CinemaBreaking:அஜித்தின் 50-வது பிறந்தநாளில் 'வலிமை' பர்ஸ்ட் லுக்.! போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Producer Boney Kapoor has said that the first look of Ajith's valimai and the promotion work for the film is about to start on Ajith's 50th birthday.

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் பல பிரபலங்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.இதனை அஜித் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.எனவே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதாவது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தல அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.இது தல ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரு வருட காலமாக வலிமை அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தல ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

unknown node