நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு வடிவேலு உருக்கமான இரங்கல்!

வடிவேலுவின் இரங்கல் அறிக்கையில், "டெல்லி கணேஷின் நடிப்பையும், அவரின் அன்பையும் இழந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Vadivelu - Delhi Ganesh

சென்னை :பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது.

தற்போது, ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், அவரது உடல் 10 மணிக்கு மேல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இதனிடையே, அவரது திடீர் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் இரங்கல் தெரிவித்தனர். தற்பொழுது, டெல்லி கணேஷ் மறைவிற்கு வடிவேலு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

வடிவேலுவின் இரங்கல் அறிக்கையில், “டெல்லி கணேஷின் நடிப்பையும், அவரின் அன்பையும் இழந்துவிட்டேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்தது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமும் எதார்த்தத்தின் உச்சம். அற்புத நடிகனை தமிழ்த்திரையுலகம் இழந்துவிட்டது என்று குறிபிட்டதோடு, அண்ணன் மட்டும் இல்லையென்றால் ‘நேசம் புதுசு’ படத்தின் அந்த காமெடி சீன் இல்லாமலே போயிருக்கும்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.