நடிகர் சூர்யா தற்போது தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். படத்திற்க்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
unknown nodeஇந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சூர்யா 41 & வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களின் அப்டேட்டை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது ” சூர்யா சாரின் 41 -வது படத்தின் 3 பாடல்களை இசையமைத்துவிட்டேன்..அதைபோல் வாடி வாசல் படத்திலும் 3 பாடல்களை முடித்துவிட்டேன்.. வாடிவாசல் படத்தின் பின்னணி இசை பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார்.