சந்தானம் நடிக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இது ஒரு சீரியசான படம் என யாரும் நினைத்துவிட வேண்டாம் – இயக்குனர் ராம்..!
இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே சொல்லலாம். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இன்று (பிப்ரவரி 2) உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் விமர்சனம்
வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.
unknown nodeபடத்தை பார்த்த ஒருவர் ” வேடிக்கையான சிரிப்புடன் கூடிய பீரியட் காமெடி நாடகம் முதல் பாதி, அதைத் தொடர்ந்து மிக நல்ல இரண்டாம் பாதிநேர்மறைகள்: நகைச்சுவை, (சந்தானம்) லொல்லி சபா டீம், பின்னணி இசை, திரைக்கதை & இயக்கம் . (டிடி ரிட்டர்ன்ஸ்) பிறகு சந்தானத்திற்கு ஒரு நல்ல திரைப்படம். ” என கூறியுள்ளார்.
unknown nodeபடம் பார்த்த மற்றோருவர் ” மற்றொருவர் “டேய் நீ அந்த ராமசாமிதானடா.. இல்லடா வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற வடக்குப்பட்டி ராமசாமிடா.சிரிச்சி, சிரிச்சி முடியல(அதுல ஒரு 15 நிமிஷம் காமெடி காட்சிகள் இருக்கிறது) கண்டிப்பா பாருங்க எல்லாத்தையும் மறந்து சிரிச்சு சிரிச்சு சந்தோசமா வெளியில வருவீங்க” என கூறியுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” குடும்பத்துடன் போக குதூகலமாக வாங்க மொத்த டீமுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் படம் மாபெரும் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
unknown nodeunknown nodeunknown node