சந்தானம் நடிக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், […]